ஐபிஎல் 2021: வருண், ரஸ்ஸல் பந்துவீச்சில் 92 ரன்னில் சுருண்டது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 31ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின் 22 ரன்களில் தேவ்தத் படிக்கல்லும், 16 ரன்களில் ஸ்ரீகர் பரத்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏபிடி வில்லியர்ஸ் முதல் பந்திலேயே போல்டாகி பெவிலியனுக்குத் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து மேஸ்வெல் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்கள் வருண் சக்ரவத்தியின் சுழலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனால் 19 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களை மட்டுமே சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் 4 ஓவர்களை வீசிய வருண் சக்ரவத்தி 13 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு ரன் அவுட், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.