ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, May 02 2021 12:09 IST
CRICKETNMORE

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 
  • இடம்: அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் : மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 2 வெற்றியுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. மேலும் ஆர்ச்சர், அண்ட்ரூ டை, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியிலிருந்து விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பிற வீரர்கள் சொதப்பிவருவதால் அணி தோல்வியைத் தழுவிவருகிறது. பந்துவீச்சில் முஸ்தபிசூர், மோரிஸ், சக்காரியா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு சற்று பலத்தை கொடுத்து வருகிறது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடப்பு சீசன் மிக மோசமாக அமைந்துள்ளது. நடப்பு சீசனை பொறுத்தவரை இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்று ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். 

தற்போது அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளது, அணிக்கு சற்று கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியலின் கடைசி இரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகளையும், ஹைதராபாத் அணி 7 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

உத்தேச அணி

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா / மஹிபால் லோமர், ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனத்கட், சேதன் சகரியா / கார்த்திக் தியாகி, முஸ்தாபிசூர் ரஹ்மான்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரஷீத் கான், ஜகதீஷா சுசித், சந்தீப் சர்மா / புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல்.

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன், ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்ரவுண்டர்கள் - கிறிஸ் மோரிஸ்
  • பந்து வீச்சாளர்கள் - ரஷீத் கான் , ஜேய்தேவ் உனத்கட், முஷ்தபிசூர் ரஹ்மான், கலீல் அகமது

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை