‘சந்தீப் நலமாக உள்ளார்; வருண் நிலை சந்தேகம்’- வெங்கி மைசூர்
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கிடையில் இன்று ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் சிஎஸ்கே, கேகேஆர் அணியை சேர்ந்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் கேகேஆர் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், “இது மிகவும் கடினமான நேரம் தான். ஆனால் வருண் மற்றும் சந்தீப் ஆகியோர் விரைவில் குணமடைவர் என்று எதிர்ப்பார்க்கிறேன். அவர்களுக்கு ஐபிஎல், கேகேஆரின் மருத்துவர்கள் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். மேலும் வெளியில் இருந்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக சந்தீப் நலமாக இருக்கிறார். அவருக்கு காய்ச்சலோ அல்லது வேறு அறிகுறிகளோ இல்லை, அவர் நன்றாக இருக்கிறார். ஆனால் வருணிற்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் நேற்றையதை விட அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.