ஐபிஎல் 2021: தூபே, திவேத்யா அதிரடியால் தப்பித்த ராஜஸ்தான்; ஆர்சிபிக்கு 178 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சிராஜ் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அதிரடி வீரர்கள் ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் மனன் வோரா, சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி எதிரணிக்கு கிலியை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிவம் தூபே அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் அட்டமிழந்தார். பின்னர் வந்த ராகுல் திவேத்தியாவும் வழக்கம் போல் சிக்சர்களை பறக்க விட்டு 40 ரன்களை சேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ், ஹர்செல் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.