ஐபிஎல் 2021: வார்னர் இல்லாமல் களமிறங்கும் ஹைதராபாத்; டாஸ் வென்று பந்துவீச முடிவு!

Updated: Sun, May 02 2021 15:21 IST
Image Source: Google

14ஆவது சீசன் ஐபிஎல் தொடர் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவருகிறது. 

இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்ததுள்ளார். 

இன்றைய போட்டிகான ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், சுஜித், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு பதிலாக முகமது நபி, புவனேஷ்வர் குமார், அப்துல் சமத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஜெய்தேவ் உனாத்கட், ஷிவம் தூபே ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, கார்த்திக் தியாகி, அறிமுக வீரர் அனுஜ் ராவத் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் : ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், அனுஜ் ராவத், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேதன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜானி பேர்ஸ்டோவ் , கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, அப்துல் சமத், முகமது நபி, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரஷீத் கான், சந்தீப் சர்மா, கலீல் அகமது, புவனேஷ்வர் குமார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை