ஐபிஎல் திருவிழா 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ரசிகர்களின் எதிர்பார்ப்பு களுக்கு மத்தியில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதனாம், சென்னை
- நேரம் : இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்கி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சீசன் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டி வருகிறது.
அதிலும் ஷிகர் தவான் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவது அந்த அணிக்கு பெரும் பலனாக அமைந்துள்ளது. மேலும் பிரித்வி ஷா, ரிஷப் பந்த்,ஸ்டீவ் ஸ்மித், ஹெட்மையர், ஸ்டோய்னிஸ் என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கிவருகிறது.
பந்துவீச்சு தரப்பில் அஸ்வின், அமித் மிஸ்ராவுடன் ரபாடா, ஆவேஷ் கான் ஆகியோரது ஃபார்மும் சிறப்பாக இருப்பது அணிக்கான வெற்றிவாய்ப்பை எளிதாக்கியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நடப்பு சீசனில் இதுவரை சரியான ஒரு தொடக்கம் கிடைக்காமல் தடுமாறிவருகிறது. அதிலும் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோருடன் மனீஷ் பாண்டே மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன.
அதனால் நாளைய போட்டியில் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும் காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 முறையையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 முறையையும் வெற்றிபெற்றுள்ளன.
உத்தேச அணி
எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் , கேன் வில்லியம்சன், விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, கேதார் ஜாதவ், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல்.
டிசி: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷாப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரன் ஹெட்மையர், லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்.
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன் குறிப்பு
- விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், ரிஷப் பந்த்
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ஹெட்மையர், கேன் வில்லியம்சன்
- ஆல்ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ்
- பந்து வீச்சாளர்கள் - ரஷீத் கான் , அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின்