ஐபிஎல் 2021: சிஎஸ்கேவின் தொடக்க வீரர் இவர் தான்; வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!

Updated: Thu, Sep 16 2021 12:45 IST
Image Source: Google

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது முதல்முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. 

ஆனால் அதன் பின்னர் தற்போது பலமாக திரும்பியுள்ள சிஎஸ்கே அணி இந்த தொடரில் முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கைவசம் மீதும் 7 போட்டிகள் இருக்கும் வேளையில் மூன்று போட்டிகளை வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் நிச்சயம் சிஎஸ்கே அணி இம்முறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு இறுதிப்போட்டியில் விளையாடி வெற்றி பெறும் அளவிற்கு வலுவாக உள்ளது. இந்தியாவில் தொடங்கி ஒத்திவைக்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகள் தற்போது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

இந்த இரண்டாம் பாதி தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த முதல் போட்டியில் சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரரான டூ பிளெசிஸ் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் கரீபியன் லீக் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் மாற்று துவக்க வீரராக ராபின் உத்தப்பா விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட உத்தப்பா இதுவரை சிஎஸ்கே அணிக்காக விளையாடவில்லை என்றாலும் தற்போது முதன்முறையாக சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார் என்று கூறப்படுகிறது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுவரை உத்தப்பா 189 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,607 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது வாய்ப்புக்காக காத்திருந்த உத்தப்பா இந்த வாய்ப்பினை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை