ஐபிஎல் திருவிழா 2021: கடந்தாண்டு தவறவிட்ட கோப்பையைக் கைப்பற்றுமா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாதா அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஒன்று. அதிலும் கடந்தண்டு ஐபிஎல் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் போராடி கோப்பையை நழுவவிட்டது.
இந்நிலையில், இம்முறையாவது கோப்பையை வெல்லும் முயற்சியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்முறம் காட்டிவருகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸின் பலம்
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஹெட்மையர், ஸ்டோய்னிஸ், ஸ்மித், பில்லிங்ஸ் என நட்சத்திர பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இம்முறை உள்ளூர் வீரர் ரிஷப் பந்த் தலைமைத் தாங்கி வழிநடத்தவுள்ளார்.
அதேபோல் அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா போன்ற சுழற்பந்துவீச்சாளர்களுடன் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபாடா, கிறிஸ் வோக்ஸ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இருப்பது டெல்லி அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸின் பலவீனம்
அணியின் கேப்டானாக செயல்பட்டுவந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளதால், இளம் வீரர் ரிஷப் பந்திற்கு கேப்டன் பொறுப்பு வழங்கியுள்ளது. ஆனால் அணியில் தவான், ஸ்மித், ரஹானே, அஸ்வின் போன்ற அனுப வீரர்கள் இருக்கும் போது, ரிஷப் பந்த்திற்கு கேப்டன்சியைக் கொடுத்துள்ளது சற்று பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்தவுள்ள ரிஷப் பந்த், சவால்களை சமாளித்து அணியை கோப்பையை நோக்கி அழைத்துச் செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி: ரிஷாப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், பிருத்வி ஷா,ரஹானே, ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், ஆக்சர் பட்டேல், அமித் மிஸ்ரா, லலித் யாதவ், பிரவீன் துபே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, அவேஷ் கான், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிப்பல் பட்டேல், விஷ்ணு வினோத், லுக்மான் மேரிவாலா, சித்தார்த், டாம் கரன், சாம் பில்லிங்ஸ்.