ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி அட்டவணை & அணி விவரம்!

Updated: Fri, Mar 18 2022 16:55 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்றிராத அணிகளில் ஒன்றாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்தாண்டு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேசமயம் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, தென் ஆப்பிரிக்க வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆர்சிபியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி அட்டவணை

1.போட்டி 3 - மார்ச் 27, ஞாயிறு, இரவு 7:30 மணி

பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

2.போட்டி 6 - மார்ச் 30, புதன், மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

3.போட்டி 13 - ஏப் 05, செவ்வாய், மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வான்கடே ஸ்டேடியம், மும்பை

4.போட்டி 18 -ஏப் 09, சனி, மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

5.போட்டி 22 - ஏப். 12, செவ்வாய், மாலை 7:30

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

6.போட்டி 27 - ஏப். 16, சனி, இரவு 7:30

டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வான்கடே ஸ்டேடியம், மும்பை

7.போட்டி 31 - ஏப். 19, செவ்வாய், மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

8.போட்டி 36 - ஏப். 23, சனி, மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

9.போட்டி 39 - ஏப். 26, செவ்வாய், மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே

10.போட்டி 43 - ஏப். 30, சனி, பிற்பகல் 3:30

குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

11. போட்டி 49 - மே 04, புதன், மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே

12.போட்டி 54 - மே 08, ஞாயிறு, பிற்பகல் 3:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வான்கடே ஸ்டேடியம், மும்பை

13.போட்டி 60 - மே 13, வெள்ளி, மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

14.போட்டி 67 - மே 19, வியாழன், மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் டைட்டன்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

ஆர்சிபி அணி விவரம்

விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், டூப்ளசிஸ், ஹர்ஷல் பட்டேல், வானிண்டு ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராஜ்வாட், சபாஷ் அகமது, ஆகாஷ் தீப், ஜோஸ் ஹாசல்வுட், மஹிபால் லாம்ரார், ஃபின் ஆலண், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் பேஹ்ரெடோர்ஃப், சுயாஷ் பிரபுதேசாய், சாமா மிலிண்ட், அனீஷ்வர் கௌதம், கார்ன் ஷர்மா, சித்தார்த் கௌல், லுவினித் சிசோடியா, டேவிட் வில்லி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை