சிஎஸ்கே புதிய கேப்டனிடம் பிரச்சனை உள்ளது - பத்ரிநாத்!

Updated: Fri, Mar 25 2022 16:17 IST
Image Source: Google

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி நேற்று திடீரென விலகினார். புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

15ஆவது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை அணியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தோனியுடன் பயணித்து வருபவர் ரவீந்திர ஜடேஜா. எனவே தோனி சேர்த்து வைத்த புகழை தொடர்ந்து எடுத்துச் செல்ல ஜடேஜா தான் தகுதியானவர் என காசி விஸ்வநாதண்ட் விளக்கமளித்திருந்தார். மேலும் ஜடேஜாவுடன் தோனி இந்த சீசன் முழுவதும் இருந்து தயார் படுத்துவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜடேஜா கேப்டன்சி செய்வதில் பிரச்சினை இருப்பதாக பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஜடேஜா எப்போதுமே பவுலராக தான் இருந்துள்ளார். ஆனால் கடந்த 2 சீசன்களாக பேட்டிங்கில் தன்னை ஒரு ராஜாவாக மாற்றிக்கொண்டுள்ளார். அவரின் பேட்டிங் அவரை தரமான ஆல்ரவுண்டர் ஆக்கியுள்ளதால், தற்போது 3டி கிரிக்கெட்டராக உருவெடுத்தார். தற்போது கேப்டன் பதவியும் வந்து 4டி கிரிக்கெட்டராகியுள்ளார்.

ஜடேஜா இதுவரை எந்தவொரு அணியையும் டி20 கிரிக்கெட்டில் வழிநடத்தியதே இல்லை. அணியின் முக்கிய பொறுப்புகள் ஏற்கனவே அவரின் தலையில் தான் உள்ளது. முக்கிய இடங்களில் ஃபீல்டிங் செய்ய வேண்டும். பேட்டிங் செய்ய வேண்டும். பவுலிங்கில் உதவ வேண்டும். இவை எல்லாவற்றையும் மீறி தான் கேப்டன்சியை மேற்கொள்ள வேண்டும். இது சவாலாக இருக்கும்” என கூறியுள்ளார்.

விராட் கோலியிடம் இந்திய அணியின் கேப்டன்சியை ஒப்படைத்த போது, தோனி கழட்டிவிட்டு செல்லவில்லை. அருகே இருந்து ஒவ்வொன்றாக கற்றுக்கொடுத்தார். அதே போல தான் ஜடேஜாவுக்கு அருகே இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொடுத்துவிட்டு தான் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை