ஐபிஎல் 2022: பும்ரா வேகத்தில் சரிந்தது கேகேஆர்; மும்பைக்கு 166 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 56ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் - அஜிங்கியா ரஹானே ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து அதிரடி விளையாடிவந்த வெங்கடேஷ் ஐயர் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 25 ரன்களில் அஜிங்கியா ரஹானேவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதன்பின் 43 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரஸ்ஸல், ஷெல்டன் ஜாக்சன், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன் என அனைவரும் சொற்ப ரன்களில் பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 10 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.