ஐபிஎல் மெகா ஏலம் 2022: ரூ.14 கோடிக்கு தீபக் சஹாரை தட்டித்தூக்கிய சிஎஸ்கே!

Updated: Sat, Feb 12 2022 17:57 IST
IPL 2022: CSK spend Rs 14 crore to get pacer Deepak Chahar (Image Source: Google)

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் யார் யாரை எடுக்க வேண்டும் என்ற பக்கா திட்டத்துடன் வந்த சிஎஸ்கே அணி, தங்கள் அணியில் ஏற்கனவே ஆடிய, ஆனால் தக்கவைக்க முடியாமல் விடுவித்த வீரர்களை குறிவைத்தே ஏலத்தில் எடுத்தது.

அம்பாதி ராயுடுவை ரூ.6.75 கோடிக்கும், டுவைன் பிராவோவை ரூ.4.40 கோடிக்கும், ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கும் எடுத்த நிலையில், ஆல்ரவுண்டர் தீபக் சாஹரை மற்ற அணிகளுடன் போட்டி போட்டு ரூ.14 கோடிக்கு எடுத்தது. 

பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்தும் திறமைப் பெற்ற தீபக் சாஹர், நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர். தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக பந்துவீசியதுடன் அபாரமாக பேட்டிங்கும் ஆடினார். எனவே அவரது ஆல்ரவுண்ட் திறமையை பார்த்த அணிகள், ஐபிஎல் ஏலத்தில் அவர் மீது ஆர்வம் காட்டின.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தீபக் சாஹருக்காக சிஎஸ்கேவுடன் கடும் போட்டியிட்டன. ஆனால் ஏற்கனவே சிஎஸ்கே அணி செட்டப்பில் நன்கு செட் ஆகிவிட்ட தீபக் சாஹரை எத்தனை கோடி கொடுத்தேனும் எடுத்தே தீரும் உறுதியில் இருந்த சிஎஸ்கே அணி, ரூ.14 கோடிக்கு தீபக் சாஹரை எடுத்துள்ளது.

தோனியையே ரூ.12 கோடிக்குத்தான் தக்கவைத்தது சிஎஸ்கே. அப்படியிருக்கையில், தோனியை விட ரூ.2 கோடி அதிகம் கொடுத்து ரூ.14 கோடிக்கு தீபக் சாஹரை ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை