ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் செல்லூம் - டேனியல் வெட்டோரியின் கணிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் படுமோசமாக சொதப்பி வரும் நிலையில் புதிய அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, புள்ளிப் பட்டியலில் டாப்பில் நீடித்து வருகின்றன.முதல் நான்கு இடம்:
இதுவரை 41 லீக் போட்டிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில் குஜராத், சன் ரைசர்ஸ், ராஜஸ்தான், லக்னோ அணிகள் புள்ளிப் பட்டியலின் முதல் நான்கு இடங்களில் நீடித்து வருகின்றன. 16 புள்ளிகள் பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகிவிடும். குஜராத் அணி 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும், மற்ற மூன்று அணிகளும் 6 போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுவிட்டால் பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிட முடியும்.
5ஆவது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி அடுத்த 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும், டெல்லி, பஞ்சாப் அணிகள் 6 போட்டிகளில் 4 வெற்றிகளையும் பெற வேண்டும். கொல்கத்தா அடுத்த 5 போட்டிகளிலும் 5 வெற்றிகளை பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும்.
அதேபோல் சிஎஸ்கே அடுத்த 6 போட்டிகளிலும் மெகா வெற்றியை பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மும்பை அணி 8 போட்டிகளிலும் தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி, எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்துப் பேசியுள்ளார்.
அதில் கூறியுள்ள அவர்“என்னைப் பொறுத்தவரை குஜராத், ராஜஸ்தான் அணிகள் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும். அடுத்து பெங்களூர், லக்னோ அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்ற அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம்” எனக் கூறினார்.
தற்போது 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றிருக்கும் சன் ரைசர்ஸை விட்டுவிட்டு, 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று -0.5 நெட் ரன் ரேட்டில் இருக்கும் ஆர்சிபி அணியை விக்டோரி தேர்வு செய்திருப்பது கடும் வினர்சகர்களை பெற்று வருகிறது.