ஐபிஎல் 2022: ஃபாஃப், விராட், தினேஷ் மிரட்டல்; இலக்கை எட்டுமா பஞ்சாப்?

Updated: Sun, Mar 27 2022 21:11 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பந்துவீச தீர்மானித்தார். மேலும் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலும், ஆர்சிபி கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸும் பொறுப்பு வகித்தனர்.

இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - அனுஜ் ராஜ்புட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த அனுஜ் ராஜ்புட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஃபாஃப் டூ பிளெசிஸ் 41 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருடன் இணைந்த விராட் கோலியும் அதிரடியில் மிரட்ட எதிரணி பந்துவீச்சாளர் செய்வதறியாமல் திணறினர்.

பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டூ பிளெசிஸ் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங்கிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் ஃபாஃப் விட்டு சென்றதை மீண்டும் தொடர்ந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த விராட் கோலி 41 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 33 ரன்களையும் சேர்த்தனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை