ஐபிஎல் 2022: ஏலத்தில் லக்னோ அணியின் திட்டம் குறித்து வாய் திறந்த கவுதம் கம்பீர்!

Updated: Sat, Jan 29 2022 14:43 IST
IPL 2022: Gautam Gambhir REVEALS Lucknow Super Giants` strategy for mega auction (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாக ஒப்பந்தம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அணியின் பெயர் முதல், வீரர்கள் தேர்வு வரை பின்னால் இருந்து செயல்படுவது கவுதம் கம்பீர் ஆகும். அவர் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்திற்காக லக்னோ அணி கே.எல்.ராகுல், ரவி பிஸ்னாய், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய மூன்று பேரை தேர்வு செய்துள்ளது. முதலில் ரஷித் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறிய நிலையில், கம்பீர் வந்தவுடன் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றினார். ரஷித் கானின் இடத்திற்கு இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடாத ரவி பிஸ்னாயை தேர்வு செய்தார்.

இந்நிலையில் மெகா ஏலத்தின் போது லக்னோ அணியின் திட்டம் என்ன என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். அதில், புதிய ஒரு அணியை உருவாக்குவதில் எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக பார்க்கிறேன். நாங்கள் இதுவரை உள்ள எந்த பழைய திட்டத்தையும் பின்பற்றப்போவதில்லை. லக்னோ அணிக்கென்று தனி வழி போட்டு பயணிக்கவிருக்கிறோம்.

இதுவரை இருந்த சீனியர் + இளம் வீரர்கள் கலந்த அணி என்ற திட்டத்தை மாற்றுவதே லக்னோ அணி திட்டமென்று தெரிகிறது. அணி முழுவதும் திறமையான இளம் வீரர்களை வைத்து விளையாடினால் நீண்ட காலத்திற்கு எந்த பிரச்சினையும் இருக்காது. இதனை உறுதிப்படுத்தியுள்ளது கம்பீரின் மற்றொரு கருத்து.

மெகா ஏலம் குறித்து பேசியிருந்த அவர், “ரவி பிஷ்னாய் மிகவும் இளமையான வீரர். எப்படிபட்ட சூழலிலும் விக்கெட் எடுப்பதற்கு அவரை பயன்படுத்தலாம். தற்போதே அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் சூழலில் அவரின் ஆட்டத்தை மேலும் சிறப்பாக்கினால் லக்னோ அணிக்கு உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை