வார்னருடன் களமிறங்கிய வேடிக்கையாக இருந்தது - பிரித்வி ஷா!

Updated: Fri, Apr 08 2022 16:51 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்தித்தது. முதலில் பேட் பிடித்த டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. 150 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இத்தொடரில் லக்னோ அணி தொடர்ச்சியாக 3ஆவது ஆட்டத்தில் வென்றுள்ளது. புள்ளிகள் பட்டியலிலும் 2ஆவது இடத்திற்கு அந்த அணி முன்னேறியது. டெல்லி அணி 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள டேவிட் வார்னர் நேற்றைய ஆட்டத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்தை அளித்தார். 

அதிலும் குறிப்பாக மறுமுனையில் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா அரைசதம் அடித்திருந்த நிலையில், வார்னர் வழக்கத்திற்கு மாறாக விளையாடியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் வார்னருடன் களமிறங்கியது மிகவும் வெடிக்கையாக இருந்தது என அவருடன் தொடக்க வீரராக விளையாடிய பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “வார்னர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார், அவர் பந்தை அடிக்கும் விதத்திற்கு நான் ரசிகன். நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் இருந்து ஒரு பேட்டர் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடிப்பதைப் பார்க்க விரும்புகிறேன். எல்எஸ்ஜி க்கு எதிராக அவருடன் பேட் செய்வது மிகவும் வேடிக்கையாக இருந்தது, நாங்கள் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தியவுடன், அவருடன் பேட் செய்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

அனைத்து வீரர்களும் களத்தில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள நேரம் எடுக்கும். அணியால் என்ன செய்ய முடியும் என்பதை இன்று தெரிந்து கொண்டோம். போர்டில் போதிய ஓட்டங்கள் இல்லாவிட்டாலும் இறுதிவரை போராடி அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். நாம் ஒரு சில சிறிய திருத்தங்களைச் செய்ய வேண்டும், அடுத்தப் போட்டியில் தவறுகளைத் திருத்தி மீண்டும் வருவோம்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை