ஐபிஎல் 2022: வழக்கத்திற்கு மாறாக ஆடிய பட்லர்; ஆர்சிபிக்கு 170 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று வான்கேடே மைதானத்தில் நடைபெற்றுவரும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 4 ரன்களில் எடுத்திருந்த நிலையில் டேவிட் வில்லி பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோஷ் பட்லர் - தேவ்தத் படிக்கல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த படிக்கல் 37 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன், 8 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் - ஹெட்மையர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் பட்லர் பொறுமையைக் கடைபிடிக்க, மறுமுனையில் ஹெட்மையர் பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து பொறுமையாக விளையாடிவந்த ஜோஸ் பட்லர் 42 பந்துகளைச் சந்தித்து தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.பின் கடைசி ஓவரை எதிர்கொண்ட அவர், அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்ட அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 37 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 42 ரன்களையும் சேர்த்தனர்.