ஐபிஎல் 2022: ரிங்கு சிங்கை புகழ்ந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Tue, May 03 2022 12:18 IST
IPL 2022: KKR skipper Shreyas Iyer lauds Sunil Narine, Umesh Yadav, Rinku Singh after win over RR (Image Source: Google)

ஐபிஎல் கிரிக்கெட்  தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன் எடுத்தார்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஆரோன் பின்ச் 4 ரன்னிலும், பாபா இந்திரஜித் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன் எடுத்து அவுட் ஆனார். 

அதன்பின் நிதஷ் ராணா ரிங்கு சிங் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. நிதிஷ் ராணா 48 ரன்னுடனும், ரிங்குசிங் 42 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “பவர்பிளேவில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பவர்பிளேயில் 36 ரன்களை விட்டு கொடுத்து விக்கெட்டை கைப்பற்றினர். அது போன்ற தொடக்கம் தான் எங்களுக்கு தேவைப்பட்டது.

உமேஷ் யாதவ், கடினமான நீளங்களை வீசுகிறார். அவர் தனது வேகத்தை அதிகரித்துள்ளார். வலை பயிற்சியில் அவருக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினம். அவரிடம் நிறைய திட்டங்கள் உள்ளது. அதை அறிவது மிகவும் கடினம்.

ஒரு கேப்டனாக நீங்கள் அவருக்கு பந்தை கொடுக்கும் போது அவர் எப்போதும் திட்டங்களை செயல்படுத்த தயாராக இருப்பார். சுனில் நரேன் அணிக்கு ஒரு பெரிய சொத்து. அவரிடம் நான் எப்போது பந்தை கொடுக்கிறேனோ விக்கெட்டுகளை எடுக்க தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் மிகவும் சிக்கனமான பந்து வீச்சாளராக இருக்கிறார். அவர் பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்.

ரிங்கு சிங்கை பற்றி நான் டிரசிங் அறையில் சக வீரர்களுடன் பேசி கொண்டிருந்தேன். அவர் தனது 2வது அல்லது 3வது ஆட்டத்தில் விளையாடும்போது, நெருக்கயான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருந்த விதம் மிகவும் சிறப்பானது. அந்த சூழலில் நிதிஷ்ராணாவுடன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது பாராட்ட வேண்டிய விஷயம். எதிர்காலத்தில் ரிங்கு சிங் அணிக்கு ஒரு சிறந்த சொத்தாக இருப்பார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை