ஐபிஎல் 2022: அதிரடி காட்டிய பிரித்வி; அணியைக் காப்பாற்றிய ரிஷப், சர்ஃப்ராஸ்!

Updated: Thu, Apr 07 2022 21:13 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் முதலில் டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கும் பிரித்வி ஷா - டேவிட் வார்னர் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியனர்.

இதில் டேவிட் வார்னர் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் அதிரடியில் அசத்திய பிரித்வி ஷா 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் 4, ரோவ்மன் பாவல் 3 ரன்கள் என அடுத்தடுத்து ரவி பிஷ்னோவிடம் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பந்த் - சர்ப்ராஸ் அஹ்மத் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனாலும் இறுதியிலும் அந்த அணியால் அதிரடியை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 39 ரன்களையும், சர்ஃப்ராஸ் அஹ்மத் 36 ரன்களையும் சேர்த்தனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை