ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Mar 26 2022 20:04 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. மேலும் இத்தொடரின் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால் வழக்கத்தைவிட எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நாளை இரவு நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - டிஒய் படேல் மைதானம், மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

காலம் காலமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல போராடும் இரண்டு அணிகள் நாளை தங்களது முதல் போட்டியில் மோதுகின்றன. அதிலும் இந்த ஆண்டு இரண்டு அணிகளும் புதிய கேப்டன் மற்றும் புதிய அணியைக் கொண்டு பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதன்படி ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் களமிறங்கவுள்ள ஆர்சிபி அணி இந்தாண்டு நிச்சயம் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் களம் காண்கிறது.

அந்த அணியில் விராட் கோலி, கிளென் மெக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஃபின் ஆலன், ரூதர்ஃபோர்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், ஹசரங்கா, ஹசில்வுட், முகமது சிராஜ் ஆகியோர் இருப்பது பெரும் பலமாக கருதப்படுகிறது.

அதேசமயம் மயங்க் அகர்வால் கேப்டன்சியில் முதல்முறையாக களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் கோப்பையைக் கைப்பற்ற போராடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதற்கேற்றது போல் ஐபிஎல் ஏலத்தில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், பனுகா ராஜபக்சே என அதிரடி வீரர்களை அணியில் சேர்த்துள்ளது.

அதேபோல் பந்துவீச்சில் காகிசோ ரபாடா, ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா, ஓடியன் ஸ்மித் ஆகியோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 28
  • ஆர்சிபி வெற்றி - 13
  • பஞ்சாப் வெற்றி - 15

உத்தேச அணி 
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சே, ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், ஹர்பிரீத் பிரார், சந்தீப் சர்மா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஷாபாஸ் அகமது, முகமது சிராஜ்.

ஃபேண்டஸி லெவன்

  • கீப்பர் - அனுஜ் ராவத்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ், மயங்க் அகர்வால், ஷிகர் தவான், மஹிபால் லோம்ரோர், ஷாருக் கான்
  • ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை