ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஹைதாராபாத் அணியில் மீண்டும் நடராஜன்!

Updated: Sat, Feb 12 2022 17:40 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பேட்டர்கள், ஆல்-ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள் ஏலத்தைத் தொடர்ந்து பந்துவீச்சாளர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. 

இதில் முதலாவதாக தமிழக வீரர் நடராஜன் பெயர் அறிவிக்கப்பட்டது. அவரை அணியில் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்திலேயே முனைப்பு காட்டியது. 

இதன் விளைவாக ரூ. 4 கோடிக்கு மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கே நடராஜன் தேர்வானார். கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடாத நடராஜன் அதற்கு முந்தைய ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி தனது யார்க்கர் பந்துகளால் அனைவரையும் கவர்ந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை