ஐபிஎல் 2022 மெகா ஏலம் - அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம்!

Updated: Thu, Feb 10 2022 09:55 IST
IPL 2022 Mega Auction - List Of Retained Players (Image Source: Google)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15ஆவது ஐபிஎல் சீசனுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு  ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடரானது நடைபெற உள்ளது. 

இந்த இரண்டு புதிய அணிகளின் வருகையால், ஐபிஎல் தொடரில் ல் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் என 10 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு பேரை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும் மற்ற வீரர்களை ஏலத்தில் விடவேண்டும் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வாக சமீபத்தில் வெளியிட்டன.

அதேசமயம் ஐபிஎல் தொடரின் மெகா ஏலமானது வருகிற 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளன. இந்த ஏலத்தின் போது ஆர்டிஎம் எனப்படும் ரைட் டு மேட்ச் ( Right To Match) விதியினை பிசிசிஐ தற்போது நீக்கியுள்ளது.

இதனால் ஏற்கெனவே இருந்த எட்டு அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 4 வீரர்களையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 3 வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 2 வீரர்களையும் தக்கவைத்துள்ளது. 

ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரம் 

சென்னை சூப்பர் கிங்ஸ் 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15ஆவது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக 4 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜா (16 கோடி, இந்திய வீரர்), மகேந்திர சிங் தோனி (12 கோடி, இந்திய வீரர்), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி, இந்திய வீரர்), மொயின் அலி (8 கோடி, வெளிநாட்டு வீரர்) ஆகியோரை அந்த அணி தக்கவைத்துள்ளது. இதன்மூலம் சிஎஸ்கே அணி தங்களிடமிருந்த 90 கோடியில் 42 கோடியை செலவிட்டுள்ளது. இதனால் வீரர்கள் ஏலத்தின் போது சிஎஸ்கே அணியிடம் கைவசம் 46 கோடிகள் மீதமுள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் 

டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக ரிஷப் பந்த் (16 கோடி, இந்திய வீரர்), அக்சர் பட்டேல் (9 கோடி, இந்திய வீரர்), பிருத்வி ஷா (7.5 கோடி, இந்திய வீரர்), ஆண்ட்ரிச் நோர்ட்ஜே (6.5 கோடி, வெளிநாட்டு வீரர்) ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. இதையடுத்து அந்த அணியிடன் ஏலத்தில் செலவிட மீதம் 47.5 கோடிகள் கைவசம் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஆண்ட்ரே ரசல் (12 கோடி, வெளிநாட்டு வீரர்), வருண் சக்கரவர்த்தி (8 கோடி, இந்திய வீரர்), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி, இந்திய வீரர்), சுனில் நரைன் (6 கோடி, வெளிநாட்டு வீரர்) ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. இதனால் ஏலத்தில் பங்கேற்க அந்த அணியிடம் கைவசம் 48 கோடிகள் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடருக்கான நான்கு வீரர்களைத் தக்கவைத்துள்ளது. அதன்படி ரோஹித் சர்மா(16 கோடி, இந்திய வீரர்), ஜஸ்ப்ரீத் பும்ரா (12 கோடி, இந்திய வீரர்), சூர்யகுமார் யாதவ் (8 கோடி, இந்திய வீரர்), கீரன் பொல்லார்ட் (6 கோடி, வெளிநாட்டு வீரர்) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அந்த அணியிடம் கைவசம் 48 கோடிகள் உள்ளன.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. அதன்படி மயங்க் அகர்வால் (12 கோடி, இந்திய வீரர்), அர்ஷ்தீப் சிங்  (4 கோடி, இந்திய வீரர்) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அந்த அணியிடம் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க 72 கோடிகள் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 3 வீரர்களை மட்டும் தக்கவைத்தது. அதில் சஞ்சு சாம்சன் (14 கோடி, இந்திய வீரர்), ஜோஸ் பட்லர் (10 கோடி, வெளிநாட்டு வீரர்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி, இந்திய வீரர்) ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. இன்னும் அந்த அணியிடம் ஏலத்தில் பங்கேற்க 62 கோடிகள் மீதமுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஆர்சிபி என்றழைக்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்கள் மட்டும் தக்கவைத்துள்ளது. அதில் விராட் கோலி (15 கோடி, இந்திய வீரர்), முகமது சிராஜ் (7 கோடி, இந்திய வீரர்), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி, வெளிநாட்டு வீரர்) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஏலத்தில் பங்கேற்க அந்த அணியிடம் கைவசம் 57 கோடிகள் உள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது கேன் வில்லியம்சன் (14 கோடி, வெளிநாட்டு வீரர்), அப்துல் சமாத் (4 கோடி, இந்திய வீரர்), உம்ரான் மாலிக் (4 கோடி, இந்திய வீரர்) ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. இதனால வீரர்கள் ஏலத்தில் அந்த அணி 68 கோடிகளைக் கைவசம் கொண்டு களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை