பாண்டியாவை மும்பையிலிருந்து நீக்கியது ஏன்? - ஜாகீர் கான் விளக்கம்!

Updated: Wed, Jan 05 2022 19:48 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதம் 15ஆவது சீசன் துவங்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் புதிய இரண்டு அணிகளும் சேர்ந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடரானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளிலும் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டு மற்றபடி அனைத்து அணிகளும் கலைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்றார் போல் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் வீரர்களுக்கான மெகா ஏலமும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது அந்த அணியின் முக்கிய வீரரான ஹார்டிக் பண்டியாவை அணியில் இருந்து வெளியேற்றியது. அவரது நீக்கம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சமீபகாலமாக பந்து வீசாமல் ஃபிட்னஸ் இன்றி தவித்து வரும் அவரை வெளியேற்றியது சரிதான் என்று பலரும் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் அவரது நீக்கம் குறித்து பேசிய மும்பை அணியின் முக்கிய நிர்வாகியான ஜாஹீர் கான், “ஃபிட்னஸ் காரணமாக பாண்டியாவை அணியில் இருந்து வெளியேற்றப்படவில்லை. அணியில் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க வேண்டும் என்பதனால் மிகப் பெரிய விவாதம் எங்களுக்குள் நடைபெற்றது.

அதன் பிறகு மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அணியில் யார் யாரை தக்கவைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் காரணமாக நாங்கள் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைத்தோம். மிகக் கனத்த இதயத்துடன் சில வீரர்களை அணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்படியே ஹார்டிக் பாண்டியா அணியில் இருந்து வெளியேறியுள்ளார் அதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும் மீண்டும் நடைபெற இருக்கும் மெகா ஏலத்தின் போது சில முக்கிய வீரர்களை மும்பை அணி ஏலத்தில் எடுக்க எதிர்நோக்கியுள்ளது. ஆனாலும் மெகா ஏலத்திற்கு முன்பாகவே அகமதாபாத் அணி பாண்டியாவை தேர்வு செய்ய தயாராக உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை