ஐபிஎல் 2022: தோல்வி குறித்து மனமுடைந்து பேசிய ரோஹித் சர்மா!

Updated: Fri, Apr 22 2022 12:17 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது. இதே மைதானத்தில் தான் 2010ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மும்பை அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி முதல் கோப்பையை வென்றது.

தற்போது 12 ஆண்டுகள் கழித்து, ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிஎஸ்கே முடிவுரை எழுதியுள்ளது.

இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 7 போட்டிகளில் தோற்ற அணி என்ற சோகமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்தது. தோனியின் அதிரடி பேட்டிங்கை கண்டு ரோஹித் சர்மா தலையில் கையை வைத்து, மைதானத்தில் படுத்துவிட்டார். ஜடேஜாவோ தோனிக்கு தொப்பியை கழற்றி மரியாதை செய்தார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “எங்கள் அணி வீரர்கள் கடுமையாக போராடினர். இறுதி வரை நாங்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால் தோனி எந்த நெருக்கடியிலும் எப்படி விளையாடுவார் என்று நாம் அனைவருக்கும் தெரியும். தோனி தனது பேட்டிங் மூலம் சிஎஸ்கேக்கு வெற்றியை பெற்று தந்துவிட்டார்.

மும்பையின் தோல்விக்கு இது தான் காரணம் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்வது மிகவும் கடினம் ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தால், பிறகு பேட்டிங்கில் ரன் குவிப்பது கடினம் ஆகிவிட்டது. ஆனால் அதன் பிறகு விளையாடிய வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கௌரவமான இலக்கை சிஎஸ்கேக்கு நிர்ணயித்தனர்.

அதனை வைத்து சிஎஸ்கேக்கு நெருக்கடி தர முயற்சித்தோம். இன்னும் ஒரு 20 ரன்கள் கூட அடித்து இருந்தால் வெற்றி பெற்று இருப்போம் என்று ரோகித் சர்மா கூறினார். மும்பையின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின், அணியில் பெரும்பாலும் இளம் வீரர்கள் உள்ளனர். இந்த சீசனில் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் மூலம் அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடுவார்கள்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை