நாங்கள் ஒருவரை மட்டும் நம்பியில்லை - ரஷித் கான்

Updated: Sun, May 15 2022 17:52 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் இரு புதிய அணிகள் இடம்பிடித்து பட்டையை கிளப்பிவருகின்றன. அதிலும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதியை இழந்த நிலையில், கத்துக்குட்டி அணியான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்நிலையில் தங்களது அணி ஒருவரை மட்டும் நம்பி செயல்படுவதில்லை என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் ஒரு அணியாக விளையாடியுள்ளோம், இதுவரை எங்களுக்கான முழு சீசனிலும் எங்கள் வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் பங்களித்துள்ளனர். எங்கள் அணியின் சிறந்த விஷயம் என்னவென்றால், அணி ஒன்று அல்லது இரண்டு வீரர்களைச் சார்ந்து இருந்ததில்லை. இதனால்தான் ஒவ்வொரு ஆட்டத்திலும் வித்தியாசமான மேட்ச்-வின்னர் எங்களிடம் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை