ஐபிஎல் 2022: லக்னோவுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் கேப்டன் சஞ்சு சாம்சன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த தேவ்தத் படிக்கல்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 39 ரன்களில் படிக்கல்லும் வ்க்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சரிவர ஸ்கோர் குவிக்க முடியாமல் தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது.