ஐபிஎல் 2022: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

Updated: Wed, Feb 16 2022 17:06 IST
Image Source: Google

ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை போட்டி போட்டு அணிகள் கோடிகளை கொட்டின. அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அணிகள் வீரர்களை தேர்வு செய்தன. முதலில் நட்சத்திர வீரர்களின் பட்டியல் ஏலம் விடப்பட்டது. இதில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் வந்ததும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏன் என்றால் பல அணிகளுக்கு கேப்டன் இல்லை. ஸ்ரேயாஸை குறிவைத்தால் புதிய கேப்டன் கிடைத்துவிடுவார் என்பது தான் காரணம். ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றில் 87 போட்டிகளில் விளையாடி 2375 ரன்கள் அடித்துள்ளார். அவரது ஸ்டரைக் ரேட் 123 ஆகும். 

இளம் வீரர், எதிர்காலத்தில் இந்திய அணியையே வழிநடத்தி செல்லும் பொறுப்பு என பல திறமை உள்ளதால், இவர் இடம்பெறும் அணி பெல மடங்கு பலம் பெரும்.

டெல்லி அணியில் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத நிலையில் கேப்டன் பதவி ரிஷப் பண்ட்க்கு தரப்பட்டது. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு வந்ததும், அவருக்கு கேப்டன் பதவி தரப்படவில்லை.

இதனால், கடும் ஏமாற்றத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த சீசனில் சரியாக விளையாடவில்லை. இதனால் டெல்லி அணியில் தொடர விரும்பவில்லை என்று அவர் கூறினார். இந்த நிலையில் ஏலத்தில் அவரை எடுக்க கடும் போட்டி நிலவியது. அவரது ஆரம்ப விலை 2 கோடியாக இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க டெல்லி, குஜராத், கொல்கத்தா அணிகள் கடுமையாக மோதியது.

 

இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் விலை அதிரடியாக உயர்ந்தது. ஸ்ரேயாசை டெல்லி அணி தக்க வைத்து கொள்ள கடுமையாக போட்டி போட்டன. ஸ்ரேயாஸை விட்டு கொடுக்க மூன்று அணிகளுக்கும் மனம் வரவில்லை. இதனையடுத்து கடைசியாக ஸ்ரேயாஸ் ஐயரை 12 புள்ளி 25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி தட்டி தூக்கியது.

இந்நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து அவரது தலைமையில் கேகேஆர் அணி இந்த சீசனில் பங்கேற்கும் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை