ஐபிஎல் 2022: சுப்மன் கில் அரைசதம்; லக்னோவுக்கு 145 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 57ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறக்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சஹா 5 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேட் 10, கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் சுப்மன் கில் நிதனமாக விளையாட, டேவிட் மில்லர் அதிரடியாக விளையாட முயற்சித்து 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிவந்த சுப்மன் கில் 42 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். அவருடன் இணைந்த ராகுல் திவேத்தியா தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை அடித்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில் 63 ரன்களைச் சேர்த்திருந்தார்.