இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. தற்போது 35 வயதான சுரேஷ் ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Advertisement

அதன் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி இருந்தாலும், நடப்பாண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. இதனையடுத்து சுரேஷ் ரெய்னா சிறிது வாரம் ஐபிஎல் வர்ணனையாளராக பணிபுரிநதார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஏதிலும் விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் ஃபார்மில் இல்லை என்ற காரணத்தால் தான், அவரை எந்த ஐபிஎல் அணியும் மெகா ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

Advertisement

ரெய்னாவிடம் இன்னும் கிரிக்கெட் விளையாட வயது இருக்கிறது. மேலும் கடந்த ஏலத்தில் தம்மை யாரும் எடுக்காததால் விரக்தி அடைந்துள்ள ரெய்னா, அடுத்த ஐபிஎல் சீசனை குறிவைத்து காய் நகர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டியில தொடர்ந்து விளையாடி, அதில் தமது திறமையை நிரூபித்தால், ஐபிஎல் வாய்ப்பு தானாக வரும்.

இதனால் இந்த திட்டத்தில் ரெய்னா உள்ளார். இந்த நவம்பர் மாதம் வந்தால் அவரது வயது 36. அவரால் குறைந்தது இன்னும் 2 ஆண்டுகள் விளையாட முடியும். இதனால் முதலில் உடல் தகுதியை எட்டிய பிறகு, உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இழந்த ஃபார்மை மீட்க இருக்கிறார். 

இதனால், அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றால் ஒரு வேளை லக்னோ அணிக்காக விளையாடலாம். இல்லை, உள்ளூர் போட்டியில் விளையாடிவிட்டு வா என்று சிஎஸ்கேவின் அன்பு கட்டளையை நிறைவேற்றிவிட்டால், சிஎஸ்கே அணியே மீண்டும் அவரை தேர்வு செய்யலாம். இவ்விரண்டுக்கும் வாய்ப்பு அதிகமாவே உள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News