ஐபிஎல் 2022: போட்டி முடிவுக்கு பின் கோலி செய்த காரியம்; ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சுயநலம் இல்லாத மனிதர் என்று மீண்டும் நிருபித்துள்ளார்.
சரி விராட் கோலி புகழை அப்படியே கட் செய்துவிட்டு. சிஎஸ்கே பக்கம் கொஞ்சம் வருவோம். சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் ருத்துராஜ். கடந்த முறை அதிக ரன்கள் அடித்து ஆரஞ்ச் நிற தொப்பியை வாங்கினார் ருத்துராஜ் கெய்க்வாட். பின்னர் காயம், கொரோனா என அவதிப்பட்ட ருத்துராஜ் தற்போது ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார்.
நடப்பு சீசனில் 0,1,1,16,17 என ருத்துராஜ் அடித்த ஸ்கோர் விவரம் இது தான். இதனால் ருத்துராஜ் கெய்க்வாட் டை அணியில் விட்டு நீக்க வேண்டும் என்று அவரை பாராட்டிய ரசிகர்களே தற்போது விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். ருத்துராஜ் ஃபார்ம்க்கு திரும்புவதற்கான சான்றுகள் தெரிந்தாலும், அவர் கடந்த இரண்டு இன்னிங்சாக தனது தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்றாமல் உள்ளார்.
நேற்று நடந்த ஆர்சிபி ஆட்டத்திலும் கெய்க்வாட் இதே தவறை தான் செய்தார். சரி இப்போது விராட் கோலிக்கு வருவோம். கெய்க்வாட்டின் இந்த தவறை ஃபில்டிங்கில் நிற்கும் போது விராட் கோலி கவனித்துள்ளார். இதனையடுத்து, ஆட்டம் முடிந்ததும் விராட் கோலி ருத்துராஜை அழைத்து, அவர் தோள் மீது கை போட்டு சில அறிவுரைகளை வழங்கினார்.
தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஐபிஎல், மற்ற அணியை வீழ்த்தினால் தான் கோப்பை கிடைக்கும். ஆனால் அது பற்றி எல்லாம் கவலை எல்லாம் இல்லாமல் கொஞ்சம் கூட சுயநலம் இன்றி விராட் கோலி, ருத்துராஜ்க்கு அறிவுரை வழங்கியது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ருத்துராஜ் அடித்த போட்டியில் ரன் குவித்தால் அதற்கு விராட் கோலியின் அறிவுரை காரணமாக இருக்கலாம்.