ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, Apr 30 2023 12:08 IST
IPL 2023, CSK vs PBKS Dream11 Team: Shikhar Dhawan or Ruturaj Gaikwad? Check Fantasy XI (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 41ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் தாங்கள் கடைசியாக கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்தன. 

சென்னை அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,பஞ்சாப் கிங்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடத்திலும் உள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம்: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
  • நேரம்: பிற்பகல் 3:30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்த சீசனில் சென்னை அணிக்காக கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் ரன் குவித்து வருகின்றனர். அதேபோல், அம்பத்தி ராயுடு மற்றும் ஜடேஜா இன்னும் பேட்டிங்கில் தங்களது ஃபார்மை கொண்டு வரவில்லை. ஜடேஜா பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும், இன்றைய போட்டியில் ஜடேஜா, மகிஷ் தீக்‌ஷ்னா மற்றும் மொயின் அலி சுழலில் தாக்குதல் நடத்தலாம். ஏனெனில் சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமான பிட்ச் என்பது மறக்க வேண்டாம். 

வேகப்பந்துவீச்சில் தீபக் சாஹர் இல்லாத நிலையில், துஷார் தேஷ்பாண்டே 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், அவர் அதிக ரன்களை தாரை வார்ப்பது கவலை அளிக்கிறது. இளம் வீரர்களான ஆகாஷ் சிங் மற்றும் பதிரனா சிறப்பான பங்களிப்பை இன்று அளித்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயம் வெற்றிபெறும். இன்றைய போட்டியில் சென்னை அணியில் அதிக மாற்றங்கள் இல்லை என்றாலும், காயத்தில் இருந்து குணமடைந்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் பஞ்சாப் அணியின் பிரச்சனை நிலைத்தன்மை இல்லாததுதான். காயத்திலிருந்து மீண்ட கேப்டன் ஷிகர் தவான் அணிக்கு திரும்பியும் பயனில்லை. இன்றைய போட்டியில் தவான், பிரப்சிம்ரன் சிங், அதர்வா டெய்டே ஆகியோர் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சாம் கரன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி வருகின்றார். அதேபோல், அர்ஷ்தீப் சிங் மற்றும் ககிசோ ரபாடா வேகத்தில் மிரட்டலாம்.

இருப்பினும் அந்த அணி பேட்டிங்கில் செயல்பட்டால் மட்டுமே வெற்றியை ஈட்டமுடியும் என்பதால் இப்போட்டியில் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    
மைதானம் எப்படி..? 

எம்.ஏ. சிதம்பரம் மைதானம் பெரும்பாலும் பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சாக இருக்கும். டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.

உத்தேச லெவன்

  • மோதிய போட்டிகள் - 27
  • சென்னை சூப்பர் கிங்ஸ் -15
  • பஞ்சாப் கிங்ஸ் -12

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கே), மதிஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, ஆகாஷ் சிங்.

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கே), அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், சிக்கந்தர் ராசா, ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, ரிதுராஜ் கெய்க்வாட், அதர்வா டைடே, ஷிகர் தவான்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன்
  • பந்துவீச்சாளர்கள் - ராகுல் சாஹர், மகேஷ் திக்ஷனா.

கேப்டன்/துணைக்கேப்டன் - டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை