ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Apr 20 2023 14:16 IST
Image Source: CricketNmore

ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடி வருகின்றனர். இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் தான். இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வார்னர் (3 அரைசதத்துடன் 228 ரன்), அக்ஷர் பட்டேல் (129 ரன் மற்றும் 2 விக்கெட்) தவிர மற்றவர்கள் தடுமாறுகிறார்கள். 

குறிப்பாக பிரித்வி ஷா (5 ஆட்டத்தில் 34 ரன்), மிட்செல் மார்ஷ் (3 ஆட்டத்தில் 4 ரன்) ஆகியோரின் சொதப்பல் தான் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே இவர்கள் ரன்வேட்டை நடத்தினால் தான் சரிவில் இருந்து எழுச்சி பெற முடியும். 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி ஒவ்வொரு ஆட்டமும் டெல்லிக்கு முக்கியமானதாகும். ஒன்றில் தோற்றாலும் சிக்கல் தான்.

இதே போல் முதல் 3 ஆட்டங்களில் 2இல் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி கடைசி இரு ஆட்டங்களில் முறையே ஹைதராபாத், மும்பையிடம் 'சரண்' அடைந்தது. கொல்கத்தாவை பொறுத்தவரை பேட்டிங்கில் வலுவாக உள்ளது. 4 ஆட்டங்களில் 185 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதே அதற்கு சான்று. பந்து வீச்சு தான் சீராக இல்லை. 

ஏனெனில் கடந்த போட்டியில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, லோக்கி ஃபர்குசன் என அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். அதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மொத்தத்தில் தோல்வியால் துவண்டு போய் உள்ள டெல்லிக்கு கொல்கத்தா மேலும் ஒரு இடி கொடுக்குமா அல்லது சறுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • கேகேஆர் - 16
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 14

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் - பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கே), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அபிஷேக் போரல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, முஸ்தபிசுர் ரஹ்மான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரஹ்மானுல்லா குர்பாஸ் (வாரம்), வெங்கடேஷ் ஐயர், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா (கேட்ச்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், மணீஷ் பாண்டே
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், அக்சர் படேல், ஆண்ட்ரே ரசல்
  • பந்துவீச்சாளர்கள் - அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி

கேப்டன்/துணைக்கேப்டன்: டேவிட் வார்னர், குல்தீப் யாதவ், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை