ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Apr 11 2023 11:49 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நைஇபெறுகிறது. 

மேலு நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் ஒரு வெற்றியைக் கூட ஈட்டமுடியாமல் தவித்து வருவதுடன், புள்ளிப்பட்டியளின் கடைசி இரு இடங்களையும் பிடித்துள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் தங்களை நிலைநிறுத்துவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் 
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும், 2ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடமும் தோல்வியை தழுவியது. இரு ஆட்டங்களிலும் மும்பையின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இன்னும் முழுமையான அதிரடியை காட்டவில்லை. ரூ.17½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும் சோபிக்கவில்லை. 

அதே போல் சூர்யகுமார் யாதவின் மோசமான பார்ம் தொடருகிறது. இரு ஆட்டத்தில் 15, 1 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே மும்பையால் எழுச்சி பெற முடியும். வலது முழங்கை காயத்தால் கடந்த ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த ஆட்டத்திலும் களம் காணுவது சந்தேகம் தான்.

இதே நிலைமையில் தான் டெல்லி கேப்பிட்டல்சும் பரிதவிக்கிறது. லக்னோ, குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியது. டெல்லி அணியில் கேப்டன் வார்னர் (56, 37 மற்றும் 65 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் சிறப்பாக இல்லை. வார்னர் கூட பெரிய அளவில் அதிரடியாக (ஸ்டிரைக் ரேட் 117.03) விளையாடவில்லை. 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா வேகப்பந்து வீச்சில் தடுமாறுவது (12, 7 மற்றும் 0) பின்னடைவாக அமைந்துள்ளது. ஆல்-ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் திருமணத்திற்காக தாயகம் சென்றிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை. உள்ளூரில் ஆடுவது டெல்லிக்கு சற்று சாதகமாக இருக்கலாம். ஏறக்குறைய சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 15
  • மும்பை இந்தியன்ஸ் - 17

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிடல்ஸ் - டேவிட் வார்னர் (கே), மனிஷ் பாண்டே, ரைலீ ரூஸோவ், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல், அன்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்/ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், திலக் வர்மா, ரோவ்மேன் பவல், ரோஹித் சர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், லலித் யாதவ், கேம்ரோன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, அக்சர் படேல், கேமரூன் கிரீன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை