ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, May 06 2023 15:24 IST
Image Source: CricketNmore

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய 50 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7. 30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 தோல்விகளுடன் தொடங்கி தற்போது மூன்று வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான அணியில்  சர்பராஸ் கான், ரிலீ ரோசோவ் , மணீஷ் பாண்டே , பிரியம் கார்க் மற்றும் பில் சால்ட் உட்பட பல வீரர்களும் இருந்தும் பெரிதாக சோபிக்கவில்லை. 

இருப்பினும் பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், அன்ரிட்ஜ் நார்ஜே மற்றும் அக்ஸர் படேல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கெனெவே அந்த அணி நடப்பு சீசனில் 5 தோல்விகளைச் சந்தித்துள்ளதால் இனி வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை, பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் கிளென் மேக்ஸ்வேல் ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். 

அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் வரும் போட்டிகளில் ரன் குவிக்க வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் இன்றைய போட்டி ஆர்சிபி பக்கம் திரும்பும். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 28
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 10
  • ஆர்சிபி - 18
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பில் சால்ட், டேவிட் வார்னர் (கே), மிட்செல் மார்ஷ், மனிஷ் பாண்டே, அக்ஷர் படேல், ரோவ்மன் பவல், அமன் ஹக்கிம் கான், ரிப்பிள் படேல், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது

ஆர்சிபி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் படேல்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அக்சர் படேல் (துணை கேப்டன்), வனிந்து ஹசரங்கா, அமன் கான்
  • பந்துவீச்சாளர்கள் - இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை