ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 37ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர் ஆர் அணி முதலில் பேட்டிங் தேர்வ் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் அடித்துக் கொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் துருவ் ஜூரெல் 34 ரன்கள், படிக்கல் 27 ரன்கள் நாட் அவுட் என்று ரன்கள் சேர்க்க இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.

Advertisement

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷிவம் துபே மட்டும் அரைசதம் அடித்துக் கொடுத்தார். ருத்துராஜ் கெய்க்வாட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா மற்றும் மொயீன் அலி இருவரும் தலா 23 ரன்கள் எடுக்க கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Advertisement

இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி, “இந்த போட்டியில் அவர்கள் போதுமான ரன்களை விட சற்று அதிகமாக குவித்து விட்டார்கள். முதல் ஆறு ஓவர்களிலேயே நாங்கள் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுத்து விட்டோம். இந்த மைதானத்தில் போதுமான ரன்களை விட நாங்கள் கூடுதலாகங்களை விட்டுக் கொடுத்ததே தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

என்னதான் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் இந்த போட்டியில் கடைசி ஓவர்களின் அவர்களது ரன் குவிப்பை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ராஜஸ்தான் அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று எங்களது அணியின் பந்துவீச்சாளர்களும் நன்றாகத்தான் செயல்பட்டனர். இந்த மைதானத்தில் போதுமான ரன்களை விட அதிக ரன்கள் அவர்கள் குவித்து விட்டதே எங்களது தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News