இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் - குர்னால் பாண்டியா!

Updated: Thu, May 25 2023 11:56 IST
IPL 2023: Everything Started When I Played That Shot, LSG Krunal Pandya Blames Himself For Defeat In (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் இருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ததுடன், இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய குர்னால் பாண்டியா, “ஒரு கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். எங்களது தோல்விக்கான ஆரம்ப புள்ளி நான் தவறான ஷார்ட் விளையாடிய இடத்தில் தான் ஆரம்பித்தது. நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட பந்தில் அந்த ஷாட்டை நான் விளையாடியிருக்கக் கூடாது. துரதிஷ்டவசமாக அதை செய்துவிட்டேன். இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்.

பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தாலும், மிகப்பெரிய ஷார்ட்களை விளையாட முடியவில்லை என்றாலும், பந்து பேட்டிற்க்கு நன்றாக வந்தது. நிதானமாக விளையாடி, சுதாரித்து சிங்கிள் எடுத்திருக்க வேண்டும். பிரேக் முடிந்த பிறகு போட்டிக்குள் வந்தபோது எங்கள் ஆட்டம் சிறப்பாக இல்லை. நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தவில்லை.

இன்று குயின்டன் டி காக் வெளியில் அமர்த்தப்பட்டு கைல் மேயர்ஸ் விளையாட வைக்கப்பட்டதற்கு காரணம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நன்றாக விளையாடி இருக்கிறார். புள்ளிவிவரங்கள் நன்றாக இருக்கிறது என்பதால் தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சிற்கு எதிராக அபாரமாக விளையாடியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பவர்-பிளே ஓவர்களில் முதல் ஓவரிலேயே சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினேன்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை