16ஆவது சீசன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், சேஸிங்கை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

Advertisement

இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், முதல் ஓவர் முடிவதற்கு முன்பாக கனமழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக ஆடுகளத்தில் அதிகளவு ஈரப்பதம் இருந்தது. குறிப்பாக பிட்ச் அருகே உள்ள பயிற்சி பிட்சில் அதிகளவில் ஈரப்பதம் இருந்தது. இதையடுத்து ஈரப்பதத்தை குறைக்க பஞ்சு, மணல் மற்றும் ரோலர் ஆகியவற்றை பயன்படுத்தி மைதான ஊழியர்கள் பணி செய்து வந்தனர்.

Advertisement

இந்த நிலையில் 11.45 மணிக்கு மேல் ஆட்டம் தொடங்கவில்லை என்றால் ஓவர்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 11.30 மணியளவில் நடுவர்கள் சோதனை செய்ய வந்தனர். அப்போது குஜராத் அணியிடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிர்வாகிகளுடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இந்த நிலையில் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 12.10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15 ஓவர்களில் சென்னை அணி 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4 ஓவர்கள் மட்டுமே பவர் பிளே என்றும், குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 3 ஓவர்கள் வரை வீசலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே 3 பந்துகள் வீசப்பட்டு 4 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், 14.3 ஓவர்களில் சென்னை அணி 167 ரன்களை சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News