ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Apr 25 2023 11:48 IST
IPL 2023, GT vs MI Dream11 Team: Rohit Sharma or Hardik Pandya? Check Fantasy XI (Image Source: CricketNmore)

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளையும், மும்பை அணி 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்துள்ளதால் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிபார்ப்பு அதிகரித்துள்ளது.  

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ச் அணி நடப்பு தொடரில் இதுவரை 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் கேமரூன் கிரீன், டிம் டேவிட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால், மோசமான பந்துவீச்சு தான் அந்த அணியின் பெரிய பிரச்னையாக உள்ளது.

சரியான டெத் பவுலர்கள் இல்லாமல் மும்பை அணி திணறி வருகிறது. கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெல்ல பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்.

குஜராத் அணி நடப்பு தொடரில் இதுவரை 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்தாலும் கடந்த சில போட்டிகளில் குஜராத் அணி சற்றே தடுமாறி உள்ளது. ஷுப்மன் கில், விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்க, ஷமி, ரஷித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், வெறும் 135 ரன்களை மட்டுமே அடித்தாலும் லக்னோ அணியை 128 ரன்களுக்கு சுருட்டி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

மைதானம் எப்படி?

நரேந்திர மோடி மைதானம் ஒரு நடுநிலையான களமாகவே உள்ளது. போட்டியின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், நேரம் போக போக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் செயல்படும். 175 ரன்களுக்கும் அதிகமான இலக்கு என்பது விரட்டுவதற்கு சற்றே கடினமானது தான்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 01
  • மும்பை இந்தியன்ஸ் -01
  • குஜ்ராத் டைட்டன்ஸ் - 00

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கே), அபினவ் மனோகர், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - விருத்திமான் சாஹா
  • பேட்ஸ்மேன்கள் - ஷுப்மான் கில், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன் 
  • பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், முகமது ஷமி, பியூஷ் சாவ்லா

கேப்டன்/துணைக்கேப்டன் - ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, கேமரூன் க்ரீன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை