ஐபிஎல் 2023: மோஹித் சர்மா 2.0; லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல்ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக கில் , விருத்திமான் சஹா களமிறங்கினர் . தொடக்கத்தில் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா நிலைத்து ஆடினார். சஹா , பாண்டியா இணைந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 72 ரன்னாக இருந்தபோது சஹா47 ரன்களில் வெளியேறினார், அடுத்து வந்த அபினவ் மனோகர் 3 ரன்களில் , விஜய் சங்கர்10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார், பின்னர் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட பாண்டியா 66 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 135ரன்கள் எடுத்தது . லக்னோ சார்பில் குருனால் பாண்டியா , ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 24 ரன்களை எடுத்திருந்த கைல் மேயர்ஸின் விக்கெட்டை ரஷித் கான் கைப்பற்றினார்.
அதன்பின் ராகுலுடன் இணைந்து குர்னால் பாண்டியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இருந்தாலும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் லக்னோ அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை வீசிய முகமது ஷமி வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அதன்பின் கடைசி ஓவரை மொஹித் சர்மா வீச, அந்த ஓவரில் 68 ரன்களை சேர்த்து நங்கூரம் போல் நின்ற கேல் ராகுல் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டத்தின் பரபரப்பும் கூடியது. அதற்கடுத்த பந்திலேயே மார்கஸ் ஸ்டொய்னிஸும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து ஆயூஷ் பதோனியும் ரன் அவுட்டாகிட, கடைசி 2 பந்துகளில் லக்னோ அணி வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
அடுத்த பந்தில் தீபக் ஹூடாவும் ரன் அவுட்டாகிட, குஜராத் அணியின் வெற்றியும் உறுதியானது. இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் தரப்பில் கடைசி ஓவரை வீசிய மோஹித் சர்மா 2 விக்கெட் மற்றும் 2 ரன் அவுட் செய்ததுடன், வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.