ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sun, May 07 2023 12:06 IST
Image Source: CricketNmore

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 51ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - நரேந்திரெ மோடி மைதானம், அகமதாபாத்
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை குர்னால் பாண்டியா ஏற்றுள்ளார். இதனால் இன்றையப் போட்டியில் சகோதரர்களான ஹர்திக் பாண்டியா - குர்னால் பாண்டியா மோதிக் கொள்வதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லக்னோ அணியை பொறுத்தவரை கேஎல் ராகுல் இல்லையென்றாலும் கைல் மேயர்ஸ், குர்னால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயூஷ் பதோனி என்று பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. அதேபோல் ரவி பிஷ்னாய், கிருஷ்ணப்பா கௌதம், நவீன் உல் ஹக், ஆவேஷ் கான் என்று பந்துவீச்சும் சரியான கலவையில் இருக்கிறார்கள். இதனால் வலிமையான குஜராத் அணிக்கு லக்னோ நிச்சயம் சவாலளிக்கும்.

மறுபுறம் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசுர பலத்துடன் உள்ளது. பவர் பிளே ஓவர்களில் ஷமியை கடப்பதே பெரும்பாலான அணிகளுக்கு சவாலாக உள்ளது. இதனால் சொந்த மண்ணில் விளையாட உள்ள இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் குஜராத் அணி உள்ளது. 

அணியின் பேட்டிங்கில் ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ராகுல் திவேத்தியா, டேவிட் மில்லர் ஆகியோரும் பந்துவீச்சில் ரஷித் கான், நூர் ஆஹ்மத், முகமது ஷமி, மோஹித் சர்மா ஆகியோரும் இருப்பது அணியின் வலிமையைக் காட்டுக்கிறது. அதேசம்யம் ஜோஷுவா லிட்டில் நாடு திரும்பியுள்ளதால் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • குஜராத் டைட்டன்ஸ் - 03
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 00

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கே), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மனன் வோஹ்ரா, கைல் மேயர்ஸ், கரண் ஷர்மா, குர்னால் பாண்டியா (கே), மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கிருஷ்ணப்பா கவுதம், நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், மொசின் கான்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - விருத்திமான் சாஹா, நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்டியா (கே), கைல் மேயர்ஸ், குர்னால் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ரஷித் கான், நவீன்-உல்-ஹக்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை