ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, May 15 2023 11:41 IST
IPL 2023 - Gujarat Titans vs Sunrisers Hyderabad, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)

16ஆவது  சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குருப் சுற்றில் இன்னும் 9 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையாததால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இதில் இன்று நடைபெறும் 62ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையடவுள்ளது. இதில் குஜராத் அணி புள்ளிப்பட்டியளில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று அதனை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அகமதாபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 12 போட்டியில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று (பிளே-ஆஃப்) வாய்ப்பை நெருங்கி விட்டது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர வலுவாக விளங்கும் குஜராத் அணி, மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலேயே வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த ஆட்டத்தில் 219 ரன் இலக்கை விரட்டிய குஜராத் அணி 191 ரன்னில் முடங்கி 27 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

அந்த ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ரஷித் கான் (4 விக்கெட் மற்றும் ஆட்டம் இழக்காமல் 79 ரன்கள்) மட்டுமே ஜொலித்தார். டேவிட் மில்லர் (41 ரன்கள்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்து வீச்சும் எடுபடவில்லை. கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை களைந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும் ஆவலில் உள்ள குஜராத் அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில் (475 ரன்கள்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (281), விருத்திமான் சஹா (275), டேவிட் மில்லர் (242), விஜய் சங்கரும் (234), பந்து வீச்சில் ரஷித் கான் (23 விக்கெட்), முகமது ஷமி (19), மொகித் ஷர்மா, நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்பும் நல்ல நிலையில் உள்ளனர்.

அதேசமயம் ஐடன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணி 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது. லக்னோ அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டதன் மூலம் ஹைதராபாத் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு காலியானது. தொடக்க வரிசை வீரர்கள் சோபிக்க தவறியதும், நட்சத்திர பந்து வீச்சாளர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாததும் அந்த அணியின் சரிவுக்கு காரணமாக அமைந்தது.

ஹைதராபாத் அணியில் பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், அப்துல் சமத்தும், பந்து வீச்சில் மயங்க் மார்கண்டே, மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், நடராஜனும் வலுசேர்க்கிறார்கள். அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டதால் இதற்கு மேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் ஹைதராபாத் அணி, குஜராத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு புள்ளிபட்டியலில் முன்னேற்றம் காண முயற்சிக்கும். ஆனால் பலம் பொருந்திய குஜராத்தின் சவாலை சமாளிக்க வேண்டுமென்றால் ஐதராபாத் அணி உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 02
  • குஜராத் டைட்டன் - 01
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 01

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கே), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷித் கான், நூர் அகமது, அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கே), ஹென்ரிச் கிளாசென், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், நடராஜன், மயங்க் மார்கண்டே, பசல்ஹக் பரூக்கி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - விருத்திமான் சாஹா, ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள் - ஷுப்மான் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திரிபாதி
  • ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ரஷித் கான் (துணை கேப்டன்), டி நடராஜன், மோகித் சர்மா.

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை