ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்த கவாஸ்கர்!

Updated: Sat, Apr 29 2023 17:45 IST
Hardik Pandya

ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதிரடி பேட்டிங், அருமையான பவுலிங், அபாரமான ஃபீல்டிங் ஆகியவற்றுடன் சேர்த்து மிகச்சிறப்பான கேப்டன்சியில் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் மட்டுமல்லாது அபாரமான கேப்டனும் கூட என்பதை ஹர்திக் பாண்டியா நிரூபிக்க, அதன்பின்னர் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பையும் பெற்று அதிலும் சிறப்பாக செயல்பட்டு தனது கேப்டன்சி திறமையை காட்டினார். இந்த சீசனிலும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.

இன்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேகேஆரை எதிர்கொண்டு ஆடிவரும் நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்து பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “சில சமயங்களில் கேப்டன்கள் தங்களது ஆளுமை மற்றும் குணாதிசயங்களை அணிக்கும் கடத்த முயற்சிப்பார்கள்.ஆனால் ஹர்திக் பாண்டியா அப்படி இல்லை. 

அவரது ஆளுமையை அணி முழுக்க அவர் கடத்துவதில்லை. அவர் அவராக இருக்கிறார்.அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். அதனால் தான் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றி பெறுகிறது. இதுதான் அவரது கேப்டன்சி மரபாக இருக்கிறது. பாண்டியா தோனியை போன்ற கேப்டனாக இருக்கிறார். அவரது அணுகுமுறையும் தோனியை போலவே இருக்கிறது. தோனியிடமிருந்து நிறைய விஷயங்களை ஹர்திக் பாண்டியா கற்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை