ஐபிஎல் 2023: சிஎஸ்கேவுக்கு கடும் பின்னடைவு; ஸ்டோக்ஸ், சஹார் விளையாடுவது சந்தேசம்!

Updated: Sun, Apr 09 2023 16:55 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் 16ஆவது சீசனில் சிஎஸ்கே அணிக்கு தற்போது ஒரு பெரிய அடி விழுந்திருக்கிறது. கடந்த சீசனில் சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 ஆட்டத்தில் தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் நடப்பு சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வெற்றியை பெற்று இருக்கிறது.

இதனால் சிஎஸ்கேவுக்கு இது பிரகாசமான தொடராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் சிஎஸ்கே அணி வீரர்கள் பேட்டிங், பந்துடுச்சு என இரண்டிலும் நல்ல பணியை செய்து வருகிறார்கள். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சீசனை போல் இம்முறையும் சிஎஸ்கே வீரர் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி அவரை வாங்கி இருந்த நிலையில், அவர் மீண்டும் காயம் அடைந்திருக்கிறார். இதனால், தீபக் சஹார் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கூட ஒரு ஓவர் மட்டும்தான் வீசியிருந்தார்.

இந்த நிலையில் தீபக் சஹார் மீண்டும் சில வாரத்திற்கு விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அவர் மீண்டும் எப்போது விளையாடுவார் என தெரியவில்லை. இதேபோன்று சிஎஸ்கே அணி 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்த பென் ஸ்டோக்ஸ்க்கு மீண்டும் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவருக்கு காயம் முழுமையாக குணமடையாததால் அவர் வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டும்தான் விளையாடிக் கொண்டிருந்தார்.

லக்னோ அணிக்கு எதிராக அவர் ஒரு ஓவர் மட்டும்தான் வீசியிருந்தார். இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஒரு வாரத்திற்கு விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மும்பை அணிக்கு எதிராக களமிறங்காத மோயின் அலி, முழு உடல் தகுதியை எட்டி இருப்பதாகவும், அவர் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என தெரிகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை