‘சிறப்பாக ஆடும்பட்சத்தில் எல்லாம் நன்றாக நடக்கும்’ - அதிரடியாக விளையாடியது குறித்து விஜய் சங்கர்!

Updated: Sun, Apr 09 2023 18:57 IST
IPL 2023: It Is Just That I Am Enjoying A Lot More, Says Vijay Shankar After Unbeaten 24-ball Blitz (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்று வரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்து 204 ரன்களை எடுத்திருக்கிறது. குஜராத் சார்பில் தமிழக வீரர்களான சாய் சுதர்சனும் விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடினர். இதில் சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்களையும் விஜய் சங்கர் 24 பந்துகளில் 63 ரன்களையும் எடுத்திருந்தார்.

விஜய் சங்கர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடியதுடன், ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சரையெல்லாம் பறக்கவிட்டிருந்தார். நீண்ட நாள் கழித்து தாக்கம் ஏற்படுத்தும் வகையில் விஜய் சங்கர் ஒரு அரைசதம் அடித்திருக்கிறார். 

இந்நிலையில், இந்த இன்னிங்ஸ் குறித்து விஜய் சங்கர் பேசுகையில், “கடந்த சீசன் எனக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. ஆனால், குஜராத் அணி நிர்வாகம் என்னை விடுவிக்காமல் ரீட்டெய்ன் செய்தார்கள். அது ஒரு தனி நம்பிக்கையை கொடுத்தது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் உள்ளூர் போட்டிகளிலும் நன்றாக ஆடியிருந்தேன். 

அதெல்லாம் இந்த ஐபிஎல் தொடரை நம்பிக்கையோடு எதிர்கொள்ள காரணமாக இருந்தது. தொடருக்கு முன்பாக பயிற்சி முகாமில் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனுடன் மற்றும் குழுவினருடன் அதிக நேரம் செலவிட்டேன். இந்த மைதானத்தில் இப்படி பெரிய பெரிய ஷாட்களை ஆட அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கடைசி ஐபிஎல் சீசன் முடிந்த சமயத்தில் காயமுற்றிருந்தேன். 

அறுவை சிகிச்சை முடிந்து ஒரு 5-6 மாதங்கள் ஓய்வில் இருந்தேன். அந்த காலக்கட்டத்திலிருந்து மீண்டு வந்ததற்கு தேசிய கிரிக்கெட் அகாடமியை சேர்ந்தவர்களுக்குதான் நன்றியை சொல்ல வேண்டும். 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்கு நான் பரிசீலிக்கப்படவே இல்லை. நானும் சில காலம் மோசமான கிரிக்கெட்தான் ஆடினேன். சீராக சிறப்பாக ஆடும்பட்சத்தில் எல்லாம் நன்றாக நடக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை