ஏதுவான முறையில் தற்போது உடல் தகுதியை எட்டி இருக்கிறேன் - கிளென் மேக்ஸ்வெல்
ஐபிஎல் தொடரில் முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக காயம் காரணமாக வெளியேறுவது பிசிசிஐயும் ரசிகர்களையும் கலக்கம் அடைய செய்திருக்கிறது. முக்கிய வீரர்கள் விளையாடவில்லை என்றால் அது அணியின் செயல் திறனை பாதிக்கும். இதனால் போட்டிகள் எதிர்பார்த்தபடி இருக்காது.
போட்டி மீதான சுவாரசியமும் குறைந்து விடும்.இது வருமானத்தையும் பாதிக்கும். ஏற்கனவே ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாட வில்லை.
இந்த நிலையில் தற்போது ஆர் சி பி அணியிலும் முக்கிய வீரர்ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆர் சி பி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் மேக்ஸ்வெல். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டென்னிஸ் ஆடுகளத்தில் ஓடிய போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது போதையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதனை அடுத்து சுமார் 4 மாதம் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருந்த மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அணிக்கு திரும்பினார்.அப்போது மேக்ஸ்வெல் சரியாக விளையாடாத காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் தன்னுடைய காயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேக்ஸ்வெல், “எனது கால் தற்போது ஓகே என்ற லெவலில் இருக்கிறது. அது நூறு சதவீதம் சரியாக வேண்டுமென்றால் பல மாத காலம் ஆகும். ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஏதுவான முறையில் தற்போது உடல் தகுதியை எட்டி இருக்கிறேன். என்னால் சரியாக விளையாட முடியும் என நினைக்கிறேன்” என மேக்ஸ்வெல் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர் இரண்டு ஆண்டுகள் பயோ பபுலுக்கு வெளியே தற்போது ஆர் சி பி ரசிகர்களுக்கு முன் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. கடந்த சீசனில் மேக்ஸ்வெல் 13 போட்டிகளில் விளையாடி 31 ரன்களையும் ,6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். முழு உடல் தகுதி இல்லாத நிலையில் அவர் எப்படி லீக் ஆட்டங்களில் பங்கேற்பார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேக்ஸ்வெலின் பார்மும் தற்போது மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது .