ஐபிஎல் 2023: நிதீஷ் ராணாவுக்கு அபராதம்!

Updated: Tue, May 09 2023 20:05 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணி நேற்று மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 57 ரன்களும், ஷாருக் கான் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தலா 21 ரன்களும் எடுத்தனர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடியது. நிதிஷ் ராணா 51 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவர்களில் ரஸசலும், ரிங்கு சிங்கும் அற்புதமாக விளையாடினார்கள். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் கடைசி பந்தில் ரிங்கு சிங் அபாரமான பவுண்டரி அடித்து வெற்றியை வசமாக்கினார்.

இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதற்காக கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்திற்குள் பந்துவீசாத காரணத்துக்காக இந்த அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனெவே டூ ப்ளெசிஸ், விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், டேவிட் வார்னர் ஆகியோருக்கும் ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை