ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, May 20 2023 15:50 IST
IPL 2023 - Kolkata Knight Riders vs Lucknow Super Giants, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில் இன்று நடைபெறும் 68ஆவது லீக் ஆட்டத்தில் நிதிஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் லக்னோ அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம்- இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 ஆட்டங்களில் 15 புள்ளிகளுடன் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமாகவே இருக்கும். அதேவேளையில் லக்னோ அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக 2ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கும்.

கடந்த ஆண்டு தனது அறிமுக சீசனிலேயே லக்னோ அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்கள் மோஹன் பகான் கால்பந்து அணியின் சீருடையை பிரதிபலிக்கும் மெரூன், பச்சை நிறம் கலந்த சிறப்பு சீருடையில் களமிறங்க உள்ளது.

கொல்கத்தா அணிக்கு இந்த சீசன் ஏற்ற, இறக்கமாகவே இருந்துள்ளது. அந்த அணி அடைந்த 7 தோல்விகளில் ஈடன் கார்டனில் வீழ்ந்த 4 ஆட்டங்களும் அடங்கும். பேட்டிங்கிலும், வேகப் பந்துதுறையிலும் அனுபவம் இல்லாத வீரர்கள் காணப்படுகின்றனர். ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக சிஎஸ்கே 235 ரன்களையும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 228 ரன்களையும் வேட்டையாடி இருந்தது. 

இந்த வகையில் லக்னோ அணியும் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முயற்சி செய்யக்கூடும். கொல்கத்தா அணியில் ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சீரான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பெரிய அளவிலான வெற்றியை பெற்றாலும் தனது அடுத்த சுற்று வாய்ப்புக்கு சில அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் -02
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 00

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரேன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கைல் மேயர்ஸ், பிரேரக் மன்கட், குர்னால் பாண்டியா (கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரவி பிஷ்னோய், ஸ்வப்னில் சிங், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.

உத்தேச லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக் (துணை கேப்டன்), நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - ஜேசன் ராய், நிதிஷ் ராணா, கைல் மேயர்ஸ், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் (கேப்டன்), க்ருனால் பாண்டியா
  • பந்து வீச்சாளர் - வருண் சக்ரவர்த்தி

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை