ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, May 11 2023 10:41 IST
IPL 2023 - Kolkata Knight Riders vs Rajasthan Royals, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்ற இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் எந்த நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அந்தவகையில் இன்று நடைபெறும் 56ஆவது லீக் ஆட்டத்தில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகலும் சமபலத்துடன் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது முந்தைய 2 ஆட்டங்களில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்த உத்வேகத்துடன் உள்ளது. கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் ரிங்கு சிங், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ஜேசன் ராய், ஆண்ட்ரே ரஸல் என்று அதிரடி பட்டாளமே இருக்கிறது. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி , சுயாஷ் ஷர்மா, சுனில் நரின், ஹர்ஷித் ராணா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். சுனில் நரினின் சுழலில் இன்னும் வீரியமான மாயாஜாலம் வெளிப்படவில்லை.

இதேபோல் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4இல் வெற்றியை ருசித்த அந்த அணி அடுத்த 6 ஆட்டங்களில் 5இல் தோல்வி கண்டு தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்த அணி கடைசியாக மும்பை, குஜராத், ஹைதராபாத் அணிகளிடம் அடுத்தடுத்து உதை வாங்கியது. 

அதிலும் ஹைதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 215 ரன்னை இலக்காக நிர்ணயித்தும், கடைசி பந்தை சந்தீப் ஷர்மா நோ-பாலாக வீசியதால் அந்த அணி வெற்றியை பறிகொடுத்தது. அந்த அதிர்ச்சிகரமான தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வியூகம் அமைக்கும். ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மையரும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, ஆடம் ஜம்பாவும் நல்ல நிலையில் உள்ளனர். 

இந்த போட்டி இரு அணிக்குமே முக்கியமானதாகும். இதில் வெற்றி பெறும் அணி தான் அடுத்த சுற்று (பிளே-ஆஃப்) வாய்ப்பில் நீடிக்க முடியும். தோல்வி பெறும் அணி வாய்ப்பை இழக்கும். எனவே அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 14
  • ராஜஸ்தான் ராயல் - 12
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா (கே), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரான் ஹெட்மையர், ஜோ ரூட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், சந்தீப் சர்மா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
  • பேட்ஸ்மேன்கள் - ஜேசன் ராய், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், யஷஸ்வி யஸ்வால் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின், ஆண்ட்ரே ரஸல் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், வருண் சக்ரவர்த்தி.

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை