ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, May 03 2023 11:39 IST
IPL 2023 - Lucknow Super Giants vs Chennai Super Kings, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)

ஐபிஎல் 16ஆவது சீசனின் 46ஆவது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

லக்னோ அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 127 ரன்களை துரத்திய லக்னோ அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பில் நவீன் உல் ஹக் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், கிருஷ்ணப்ப கவுதம் மட்டுமே அதிகபட்சமாக 20 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார். 

அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுலும் தற்போது காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால், குயிண்டன் டி காக் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் சொதப்பி வரும் லக்னோ அணிக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகும். அதேபோல் பந்துவீச்சில் ரவி பிஸ்னொய், மார்க் வுட், குர்னால் பாண்டியா ஆகியோர் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.  

தோனி தலைமையிலான சிஎஸ்கே தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்த நிலையில் களமிறங்குகிறது. தோனியின் புத்திசாலித்தனமான முடிவுகளும், களத்தில் அவர் வீரர்களை கையாளும் விதமும்தான் இந்த சீசனில் சிஎஸ்கேவின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில் கே.எல்.ராகுல் விளையாடாததை தோனி சரியாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும். சிஎஸ்கேவின் பேட்டிங்கில் டேவன் கான்வே சிறந்த பார்மில் உள்ளார். 414 ரன்கள் வேட்டையாடி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.

ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே ஆகியோரும் போட்டியின் தினத்தில் சவால் அளிக்கக் கூடியவர்கள்தான். பந்து வீச்சில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இறுதிக்கட்டத்தில் அதிக ரன்களை தாரை வார்த்து அணியின் தோல்விக்கு வழிவகுத்திருந்தனர். இவர்கள் வலுவாக மீண்டு வருவதில் கவனம் செலுத்தக்கூடும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 01
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 01

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கே)/ஆயூஷ் பதோனி, கைல் மேயர்ஸ்/குயிண்டன் டி காக், க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன் (கே), கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா, நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மதிஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, ஆகாஷ் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், டெவான் கான்வே
  • பேட்ஸ்மேன்கள் - கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி (கேப்டன்), க்ருனால் பாண்டியா (துணை கேப்டன்)
  • பந்து வீச்சாளர்கள் - அமித் மிஸ்ரா, நவீன் உல் ஹக், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை