ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Apr 13 2023 13:16 IST
Image Source: CricketNmore

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இதில் இரு அணிகளும் கடைசியாக விளையாட லீக் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால், எந்த அணி வெற்றிபெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - ஐஎஸ் பிந்த்ரா மைதானம், மொஹாலி
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 2 வெற்றி (கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒரு தோல்வியை (ஹைதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ள பஞ்சாப் அணி சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரம் காட்டுகிறது. பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் (2 அரைசதத்துடன் 225 ரன்) மட்டும் தொடர்ந்து ரன் குவிக்கிறார். முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு பக்கம் மளமளவென விக்கெட் சரிந்தாலும் கடைசி வரை போராடி 99 ரன்கள் எடுத்து அணியை கவுரவமான நிலைக்கு கொண்டு வந்தார்.

சாம் கரன், ஷாருக்கான், பிரப்சிம்ரன்சிங், ராஜபக்சே உள்ளிட்டோரும் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். கால்முட்டி காயத்தில் இருந்து மீண்டுள்ள இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் இப்போது தான் அணியுடன் இணைந்துள்ளார். அவரையும், வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடாவையும் இன்றைய ஆட்டத்தில் களம் இறக்குவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் சென்னை மற்றும் டெல்லியை புரட்டியெடுத்தது. கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 204 ரன்கள் எடுத்தும், கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் தொடர்ந்து 5 சிக்சர்களை வாரி வழங்கியதால் கடைசி பந்தில் குஜராத் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

உடல்நலக்குறைவால் கடந்த ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புகிறார். மற்றபடி சாய் சுதர்சன், சுப்மன் கில், டேவிட் மில்லர், விருத்திமான் சஹா, விஜய் சங்கர், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஸாரி ஜோசப் என்று நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள குஜராத் அணி, பஞ்சாப்புக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • பஞ்சாப் கிங்ஸ் - 01
  • குஜராத் டைட்டன்ஸ் 01

உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான் (கே), பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் குர்ரான், நாதன் எல்லிஸ், மோஹித் ரதீ, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

குஜராத் டைட்டன்ஸ் – விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான் (கே), முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - பிரப்சிம்ரன் சிங்
  • பேட்டர்ஸ் - ஷிகர் தவான், ஷுப்மான் கில், சாய் சுதர்சன்
  • ஆல்-ரவுண்டர்கள் - சாம் கர்ரன், விஜய் சங்கர்
  • பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், அல்ஜாரி ஜோசப், ராகுல் சாஹர்

கேப்டன் துணைக்கேப்டன் தேர்வு - ஷிகர் தவான், ரஷித் கான், சாம் குர்ரன், சாய் சுதர்சன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை